என் மலர்
உள்ளூர் செய்திகள்
இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க வினர் கைது
ராணிப்பேட்டை:
சனாதான ஒழிப்பு மாநாட்டில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தி ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் விஜயன் தலைமையில் இந்து சமய அறிநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகை இட முயன்றதாக பா.ஜ.க.வினர் 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல திருப்பத்தூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி.வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வி.அன்பழகன் முன்னிலை வைத்தார். அனைவரையும் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.தீபா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நகரத் தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர்கள் கவியரசு, தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வர், நகர செயலாளர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பாஜகவினர் தர்மராஜா கோவிலில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பெண்கள் உள்ளிட்ட 250 பேரை போலீசார் கைது செய்தனர்.