என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேலை வாய்ப்புள்ள பாடபிரிவுகளை தேர்வு செய்து படிக்க வேண்டும்
- ஒரே பாடபிரிவு வேண்டாம்
- மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை நிகழ்ச்சியில் கலெக்டர் அறிவுரை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் 11 மற்றும் 12-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களுக்கு விழுதுகளை வேர்களாக்க எனும் உயர்கல்வி ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசியதாவது:-
உயர்கல்வியில் சேரும் மாணவ மாணவியர்கள் அனைவரும் ஒரேவித பாடத்தினை தேர்ந்தெடுக்காமல் இன்றைய காலக்கட்டத்தில் எவ்வித படிப்பு நமக்கு பயனுள்ளதாகவும்.
வேலை வாய்ப்புள்ளதாகவும் அமையும் என்பதை அறிந்து பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரே பாடப் பிரிவுகளை அனைவரும் தேர்ந்தெடுக்கக் கூடாது. குறிப்பாக மருத்துவம் சார்ந்த படிப்புகளிலேயே பல்வேறு வகையிலான படிப்புகள் உள்ளது.
அதே போன்று உங்களின் தனித்திறமைகளையும் படிக்கும் போதே வார்த்துக் கொள்ளுங்கள், இன்றைய காலகட்டத்தில் அதிகளவிலான குறுகிய கால படிப்புகள் இணையம் வாயிலாகவும், பல்வேறு கல்லூரிகளிலும் நடத்துகின்றார்கள்.
அதில் சேர்ந்து உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அதோடு ஆங்கிலம் பேசும் அறிவினையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மேலும் ஏதாவது தங்களுக்கு பிடித்த கைத்தொழியையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
கைவினைப் பொருட்களுக்கு என்றுமே சந்தையில் விற்பனை வாய்ப்பு அதிகம்.
அது நமக்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தரும் இன்றைய காலத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம்.
அதில் எந்த அளவில் நமக்கு பயன் உள்ளதோ அதே அளவில் ஆபத்தும் உள்ளது என்பதை உணர்ந்து கவனமுடன் பயன்ப டுத்துங்கள், அனைத்து மாணவ, மாணவியர்களும் உயர்கல்வியில் சேர்ந்து நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் மென்மேலும் உயர வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, பயிற்சியாளர்கள் கோபி, முருகானந்தம், சிவானந்தன், அமுதமணி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்