என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வாலாஜாபேட்டையில் பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு
Byமாலை மலர்5 Dec 2022 3:28 PM IST
- அபாயகரமான நிலையில் இருந்ததால் நடவடிக்கை
- அமைச்சர் ஆர்.காந்தி பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்
வாலாஜா:
வாலாஜாபேட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி நுழைவு வாயில் பகுதியில் கடந்த 2002-ம் ஆண்டு கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்தது.
அமைச்சர் ஆர்.காந்தி பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி ஆணையாளர் குமரி மன்னன், நகராட்சிதுணைத்த லைவர் கமல ராகவன், என்ஜினீயர் சரவணன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
இதையடுத்து வகுப்பறை கட்டிடம் அமைச்சர் முன்னிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
Next Story
×
X