என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மின் கசிவால் விசைத்தறி எரிந்து நாசம்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் சுகுமார் (41).
இவர் தனது வீட்டின் பின்புறம் விசைத்தறி பட்டறை வைத்து நெசவுத் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென விசைத்தறிக்கு செல்லும் மின்சாரலைனில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது.
இதில் தீ மளமளவென பரவி விசைத்தறி பாவுகள் மற்றும் நூல் கோன்கள் எரிந்து நாசம் அடைந்தது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பனப்பாக்கம் விஏஓ பூபாலன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story
×
X