என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்து
ராணிப்பேட்டை:
சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி நேற்று இரவு பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசு பஸ் சென்றது.
அப்போது வாலாஜா டோல்கேட் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலையில் தறிகெட்டு ஓடியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். டிரைவர் பஸ்சை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சித்தார்.
இருப்பினும் பஸ் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மற்றும் எஞ்சின் பாகங்கள் சேதமடைந்தது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் விரைந்து சென்று கிரேன் மூலம் பஸ்சை அப்புறப்படுத்தினர். போக்குவரத்து நெரிசலை உடனடியாக சரிசெய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
X