என் மலர்
உள்ளூர் செய்திகள்
எல்.இ.டி விளக்குகள் அமைப்பது பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
- அம்மூர் முதல் நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நடந்தது
- கூட்டத்தில் பேரூராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்துகொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் முதல் நிலை பேரூராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று பேரூராட்சிமன்ற தலைவர் சங்கீதா மகேஷ் தலைமையில் நடைபெற்றது.
செயல் அலுவலர் கோபிநாதன், பேரூராட்சிமன்ற துணை தலைவர் உஷாராணி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அம்மூர் முதல் நிலை பேரூராட்சியில் நீர் பிடிப்பு மற்றும் ஓடை புறம்போக்கு தவிர அரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அடிமனை நீங்கலாக மேற்கூரைக்கு மட்டும் வரி விதிப்பு செய்வது,நடப்பு 2023-24ம் ஆண்டில் செயல்படுத்துவதற்கு கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், மூலதன மான்யம், இயக்ககம் மற்றும் பாராமரிப்பு, இடைவெளி நிரப்பும் திட்டம், நமக்கு நாமே திட்டம் மற்றும் நபார்டு திட்டத்தில் பணிகள் தேர்வு செய்வது, அம்மூர் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் 451 மின் விளக்குகளைரூ.26.77 லட்சம் மதிப்பீட்டில்
எல்.இ.டி போன்ற ஆற்றல் மிகு விளக்குகளாக மாற்றம் செய்யும் பணியினை மேற்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.