என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே ஊழியர் வீட்டில் கொள்ளை
- சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை தனிப்படை ஆய்வு
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த கீழ் குப்பம் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ராமன். ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு தீபா என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் உள்ளனர். சதீஷ் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
மகனை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யா வீட்டை பூட்டிக் கொண்டு குடும்ப த்துடன் சென்னைக்குச் சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்க ப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த 15 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை யடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வித்யா அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அரக்கோணம் ஏ எஸ் பி யாதவ் கிரீஸ் அசோக் மற்றும் போலீசார் கொள்ளை போன வீட்டிற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
இதே போல அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபாபு. இவரது மனைவி நிர்மலா வயது (49). இவர் சம்ப வத்தன்று அரக்கோணம் கணேஷ் நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் இரவு தனது மொபட்டில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது கணேஷ் நகர் பகுதி அருகே வரும்போது ஹெல்மெட் அணிந்து வந்த 2 வாலிபர்கள் நிர்மலாவின் கழுத்தில் இருந்த தாலி செயின் உள்பட 10 பவுன் நகைகளை பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா கூச்சலிடவே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் நகைகளை பறித்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.
இது சம்பந்தமாக அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் இந்த 2 சம்பவங்கள் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.