search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழா
    X

    வாலாஜாப்பேட்டையில் ஸ்ரீ காமாட்சி சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் தேர் திருவிழா பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்த போது எடுத்த படம்.

    ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் தேர் திருவிழா

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மாள் சமேத ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.

    தேர் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 25ம் தேதி முதல் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சாமிகள் ஊர்வலம் வந்தன.

    இதில் விக்னேஸ்வரர் மூசிக வாகனம், அன்ன வாகனம்,சிம்ம வாகனம்,கற்பக விருட்ச காமதேனு வாகன சேனை,நாக வாகனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து 31ம் தேதி திருக்கல்யாண ரிஷப வாகனம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று ஏகாம்பரநாதர் திருக்கோயில் சார்பில் தேர் திருவிழா இன்று நடந்தது.தேர்ரானது கோவிலில் இருந்து தேர் புறப்பட்டு எம்.பி.டி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் மீண்டும் தேர் இழுக்கப்பட்டு வாலாஜா பேருந்து நிலையம் வழியாக சோளிங்கர் ரோடு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை சென்றடையும்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் வாலாஜா தன்வந்திரி பீடம் டாக்டர் முரளிதர சாமிகள், சித்தஞ்சி மோகானந்த சாமிகள், நகரமன்ற தலைவர் ஹரிணி, துணை தலைவர் கமலராகவன், தக்கார் சிவக்குமார், ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் திருநாவுக்கரசு,திமுக நகர செயலாளர் தில்லை, அதிமுக நகர செயலாளர் மோகன், காங்கிரஸ் நகர தலைவர் மணி ஊர் நாட்டாண்மை தாரர்கள்,கோவில் நிர்வாகிகள், வியாபாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள், வாலாஜா நகர பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    இவனை தொடர்ந்து நாளை குதிரை வாகனம், 3-ம் தேதி அதிகார நந்தி சேனை, ராவணன் வாகனம், விடையாற்றி உற்சவம், 7-ம் தேதி மாவடி சேவை, 10ம் தேதி மஹா அபிஷேகம், இலட்சதீபம் ஆகியவை நடைபெற உள்ளது.

    Next Story
    ×