என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பட்டா வழங்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை பட்டா வழங்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை](https://media.maalaimalar.com/h-upload/2023/10/06/1961702-rpt-20231006-wa0001.webp)
X
பட்டா வழங்க கோரி தாசில்தார் அலுவலகம் முற்றுகை
அரக்கோணம்:-
அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தில் இருளர் இன மக்கள் வசிக்கும் காலணி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அசத்து வருகின்றனர்.அவர்கள் வசிக்கும் பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் சமூக நலத்துறைக்கு சொந்தமான பகுதியில் இடம் தந்து பட்டா வழங்க வேண்டும் எனகூறி சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மக்களிடம் தாசில்தார் சண்முகசுந்தரம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து கலைந்து சென்றனர்.
Next Story
×
X