என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
விசைத்தறிகளை பயன்படுத்துவோருக்கு 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை
Byமாலை மலர்22 Sept 2022 2:59 PM IST
- உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த சாதாரண விசைத்தறிகளை பயன்படுத்துவோர் 50 சதவீத மானியத்துடன் மின்னணு பலகை பொருத்த விண்ணப்பிக்கலாம்.
சாதாரண விசைத்தறிகளில் உற்பத்தி செய்யும் போது நூலிழைகள் அடிக்கடி அறுந்து விடுவதால் தொழிலாளர்களின் உற்பத்தி திறன் பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்ப்பதற்கும், உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும் கூட்டுறவு மற்றும் கூட்டுறவு அமைப்பு சாரா விசைத்தறிகளுக்கு 50 சதவீத மானியத்துடன் கூடிய மின்னணு பலகை பொருத்தப்படும். அதன்படி தகுதியானவர்கள், இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை வேலூர் மாவட்ட கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு 0416-2242547 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
X