என் மலர்
உள்ளூர் செய்திகள்
சாலையில் வீணாகும் குடிநீர்
- ஒரு வருடமாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் மற்றும் திருப்பாற்கடல் ஊராட்சியில் பாலாற்றில் ஆய்துளை கிணறுகள் அமைத்து பைப் லைன் வழியாக ராமாபுரம், சுமைதாங்கி, காவேரிப்பாக்கம் போன்ற ஊர்களுக்கு தண்ணீர் செல்கிறது.
இந்நிலையில் பாலாற்றில் இருந்து அத்திப்பட்டு செல்லும் வழியில் செல்லும் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.
ஒரு வருடத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் சரி செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் குடிநீர் தொடர்ந்து வீணாகிறது.
மேலும் சிறு பாலத்தில் தண்ணீர் தேங்கி பாலத்தின் உறுதி தன்மையை இழந்து சேதம் அடையும் அபாயம் உள்ளது ஒரு வருடத்திற்கு மேலாக உடைந்த வீணாகும் குடிநீரை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமா?.