என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ராணிப்பேட்டையில் பரவலாக பெய்தமழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு ராணிப்பேட்டையில் பரவலாக பெய்தமழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2022/10/10/1774568-rain.jpg)
X
ராணிப்பேட்டையில் பரவலாக பெய்தமழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
By
மாலை மலர்10 Oct 2022 3:19 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சாலையோரங்கள் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது
- அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 66 மி.மீ. மழை பதிவானது
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவிரிப்பாக்கம் அரக்கோணம் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. அம்மூரில் கனமழை காரணமாக அந்த பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 66 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஆற்காடு, சோளிங்கர், கலவை பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் ஆம்பூர் சர்க்கரை ஆலை பகுதிகளில் கனமழை பெய்தது. மற்ற இடங்களில் லேசான மழை பெய்தது. அதிகபட்சமாக ஆம்பூரில் 40 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ராணிப்பேட்டையில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
அரக்கோணம்- 38.4, ஆற்காடு-26, காவேரிப்பாக்கம்-66, வாலாஜா-36, அம்மூர்-42, சோளிங்கர்-15, கலவை-12.8.
Next Story
×
X