search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வராயன்மலையில் உள்ள கோமுகி அணை நீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோமுகி அணையில் இருந்து நீர் வெளிவரும் காட்சி.

    கல்வராயன்மலையில் உள்ள கோமுகி அணை நீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

    • மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது.
    • 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. கல்வராயன்மலை பகுதியில் உள்ள பொட்டியம், கல்படை, மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக வரும் மழை நீர் இந்த அணையில் தேக்கி வைக்கப்படும். கடந்த சில வாரங்களாக வெப்பசலனம் காரணமாக பெய்து வரும் மழையால் இந்த ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு விநாடிக்கு 200 கன அடி நீர் வந்தது. இதனால் அணையின் முழுக் கொள்ளலவான 46 அடியில் 44 அடி நிரம்பியது. சம்பா போகத்திற்கு நெல் நடவு செய்ய உள்ள விவசாயிகளுக்காகவும், அணையின் பாதுகாப்பு கருதியும், அணை நீரை திறந்து விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கோமுகி அணையில் இருந்து புதிய மற்றும் பழைய பாசன வாய்க்கால்கள் மூலம் விநாடிக்கு 120 கன அடி நீரினை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

    பழைய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 55 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிக்கம், மண்மலை, கரடிசித்தூர், சாவடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். புதிய பாசன வாய்க்காலில் விநாடிக்கு 65 கன அடிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கனந்தல், கச்சிராயபாளையம், அம்மாப்பேட்டை, செம்படாங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விநாடிக்கு 100 கன அடிநீர் மழைநீர் கோமுகி அணைக்கு வந்து கொண்டிருப்பதால் நடப்பு சம்பா போகத்திற்கு தேவையான பாசன நீர் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைநதுள்ளனர். இந்த நீர் திறப்பு விழாவில் சங்கராபுரம் எம்.எல்.ஏ., உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் ஷ்ரவண்குமார் மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள், தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×