என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனத்தில் பரபரப்பு: ஊராட்சி மன்ற தலைவர் மனைவி மீது தாக்குதல்
- இவரது வீட்டிற்கு அளவுக்கு அதிகமாக தண்ணீரை பிடித்தார் மற்றும் தண்ணீரை வீணாக்கவும் செய்தார்.
- விஜயா வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே கிராந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் இவர் கிராந்திபுரம் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மனைவி விஜயா (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற பள்ளியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பள்ளியின் அருகில் வசிப்பவர் மணிகண்டன் (32) இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள தண்ணீர் பிடிக்கும் பொது குழாயில் இருந்து இவரது வீட்டிற்கு அளவுக்கு அதிகமாக தண்ணீரை பிடித்தார் மற்றும் தண்ணீரை வீணாக்கவும் செய்தார். இதைப் பார்த்த விஜயா இவரிடம் சென்று ஏன் தண்ணீரை இப்படி வீண் செய்கிறீர்கள் என்று கேட்டார். இதற்கு ஆத்திரமடைந்த மணிகண்டன் உடனே விஜயாவை தகாத வார்த்தை யால் திட்டி அடித்து தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விஜயா வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீஸ் ஏ.எஸ்பி. அபிஷேக் குப்தா தலைமை யி லான போலீசார் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தி ன் கீழ் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்த னர். மேலும் இது குறித்து போலீசார் விசா ரணை செய்து வருகின்றனர்.