search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துணிகளின் விலையை உயர்த்திய சாலையோர வியாபாரிகள்
    X

    துணிகளின் விலையை உயர்த்திய சாலையோர வியாபாரிகள்

    • பணம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தி ருந்தனர்.
    • தற்போதுள்ள தட்டுப்பட்டால் தருமபுரி உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் விலையை ஏற்றி விற்கின்றனர்.

    தருமபுரி,

    ஈரோடு ஜவுளி சந்தை தமிழக அளவில் பிரபலமானது.

    ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை சந்தை நடைபெறுவது வழக்கம்.

    ஒவ்வொரு வாரமும் இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாரா ஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியா பாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    மற்ற இடங்களை விட இங்கு துணிகளின் விலை குறைவாக இருப்பதால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது.

    இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அங்கு அமலில் உள்ளன. ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணம் எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தி ருந்தனர்.

    மூன்று நிலைகளில் கண்காணிப்பு குழுவினர், ஐந்துக்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த கட்டுப்பாடுகளால் வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு செல்ல பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இனி தேர்தல் முடியும் வரை இதே நிலைமை தான் நீடிக்கும் என்பதால் வியாபாரிகள் கவலையோடு உள்ளார்கள்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு சென்று துணிகளை கொள்முதல் செய்யாமல் இருப்பதால் தற்போதுள்ள தட்டுப்பட்டால் தருமபுரி உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகள் விலையை ஏற்றி விற்கின்றனர்.

    அத்தியாவசிய வேண்டு தல்கள், சுப காரியங்களுக்கு வேறு வழியின்றி கிராமப்புற மக்கள் இவற்றை கூடுதல் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

    Next Story
    ×