என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சங்கராபுரம் விவசாயிடம் ரூ.5 லட்சம் மோசடி:திருவண்ணாமலை வாலிபர் மீது வழக்கு
- தினமும் நிலத்திற்கு செல்லும் சிவக்குமாரை பார்த்து டிப்டாப் ஆசாமி புன்னகைத்தார்.
- இதனை நம்பிய சிவக்குமார், தனக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவக்குமார் (வயது 42). ஆரம்ப கல்வி மட்டுமே பயின்றவர். விவசாயம் செய்து வருகிறார். இவருடைய நிலத்திற்கு செல்லும் வழியில் வனத்துறை அலுவலகம் உள்ளது. இங்கு ஒரு டிப்டாப் ஆசாமி தினமும் நின்று கொண்டு அங்குள்ள வனத்துறை ஊழியர்களிடம் பேசிக் கொண்டிருப்பார். இதனை பார்த்துக் கொண்டு தினமும் நிலத்திற்கு செல்லும் சிவக்குமாரை பார்த்து டிப்டாப் ஆசாமி புன்னகை த்தார். பதிலுக்கு புன்ன கைத்த சிவக்குமாரிடம் டிப்டாப் ஆசாமி நாள டைவில் நண்பராகி விட்டார்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தண்டராம்பட்டை சேர்ந்த குணசேகரன் மகன் சக்தி (38) என்பது சிவக்குமாருக்கு தெரியவந்தது. இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து விவசாயம் குறித்து பேசிவந்தனர். விவசாயம் செய்வதை விட்டுவிட்டு, வனத்துறைக்கு வேலைக்கு செல்கிறாயா என்று சிவக்குமாரிடம் டிப்டாப் ஆசாமி சக்தி கேட்டுள்ளார். தனக்கு வனத்துறை உயர் அதிகாரிகள் மிகவும் நெருக்கம், அதனால் தான் இங்குள்ளவர்கள் எனக்கு மறியாதை அளிக்கின்றனர் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சிவக்குமார், தனக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.
ரூ.5 லட்சம் கொடு, அதனை வனத்துறை அதிகாரிடம் கொடுத்து உனக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று டிப்டாப் ஆசாமி சக்தி, சிவக்கு மாரிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய சிவக்குமார், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி ரூ.5 லட்சத்தை சக்தியிடம் கடந்த மே மாதம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி சென்றது முதல் சிவக்கு மாரை பார்க்க சக்தி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிவக்குமார், சக்தியை தேடி கண்டுபிடித்தார். உனக்கு வேலை வாங்கவே அலைந்து கொண்டி ருக்கிறேன், செப்டம்பரில் உனக்கு வேலை கிடைக்கும் என்று கூறிய சக்தி, சிவக்குமாரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சக்தியை தேடி சிவக்குமார் சென்றார். அவர் அளித்த பதில் சிவக்குமாருக்கு திருப்தி அளிக்காததால், எனக்கு வனத்துறை வேலை வேண்டாம், பணத்தை திருப்பிக் கொடு என்று கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சக்தி, சிவக்குமாரை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவக்குமார், இது குறித்து சங்கராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெ க்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.