என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிட்காயின் பண மோசடி குறித்து மனு அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி: மாவட்ட கலெக்டரிடம் மனு

- அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
- அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் மற்றும் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தைத் சேர்ந்த அன்பழகன் உள்ளிட்ட சிலர் பிட் காயினில் பணம் முதலீடு செய்தால் அடுத்த 100 நாட்களில் இரட்டிப்பு பணம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள். அதனை கேட்டு நாங்கள் சுமார் ரூ.60 லட்சம், பிட் காயின் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்தோம் ஆனால் நாட்கள் ஓடியும் மீண்டும் பணம் தரவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். எனவே பிட் காயின் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.