search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்
    X

    கலாஷேத்ரா விவகாரத்தில் குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்

    • விடுதலை மாதிரி ஒரு படத்தை வெற்றிமாறனால் தான் எடுக்க முடியும்.
    • தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழில்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலையை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரியும் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க பேரவை சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நீக்க வேண்டும்.

    * பாகுபாடற்ற கல்வி, மருத்துவம், குடிநீர் வழங்குவதுதான் சாதனை.

    * சுங்க கட்டணத்தை நிறுத்த வேண்டும், வரி கட்டி வாழ முடியவில்லை.

    * விடுதலை மாதிரி ஒரு படத்தை வெற்றிமாறனால் தான் எடுக்க முடியும்.

    * கலாஷேத்ரா விவகாரத்தில் உண்மை இல்லாமல் போராட்டம் நடத்த வாய்ப்பில்லை. கலாஷேத்ரா விவகாரம் தொடர்பாக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை. குற்றவாளிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    * தமிழரின் உரிமைக்காக குரல் கொடுப்பவன் பாசிஸ்ட் என்றால், நான் பாசிஸ்ட் தான்.

    * தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தொழில்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலையை உறுதி செய்ய வேண்டும்.

    * டாஸ்மாக் போல உபர், ஓலா, ரேபிட்டோ போன்ற சேவைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

    * வெளிநாட்டு நிதி மூலம் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்ததாக ஆளுநர் பேசியது திமிர் பேச்சு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×