என் மலர்
உள்ளூர் செய்திகள்
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டு- சீமான்
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- செந்தில் பாலாஜி குணமாகி வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.
சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு தி.மு.க. அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகின்றன.
செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கு எடுத்துக்காட்டு. செந்தில் பாலாஜி குணமாகி வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.
தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற வேலைகளை மத்திய அரசு செய்யும், இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.