என் மலர்
உள்ளூர் செய்திகள்
மயக்க நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி: தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை- மருத்துவமனை தரப்பில் தகவல்
- நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
- இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவை
அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக செந்தில் பாலாஜியை அழைத்துச் செல்ல முயன்றபோது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் ரத்த அழுத்தம், நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை எனத் தகவல் வெளியானது. காலை 9 மணிக்குப் பிறகுதான் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் சேகர் பாபு அவரை சந்திக்க சென்றார். அப்போது, செந்தில் பாலாஜி என்று அழைத்தபோது எந்தவித சமிக்ஞையும் அவரிடம் இருந்து வரவில்லை. சுயநினைவின்றி உள்ளார் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அவரது உடல்நிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ''அமைசச்ர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளார். இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது. சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.