என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம்](https://media.maalaimalar.com/h-upload/2023/10/20/1969237-untitled-1.webp)
தீர்த்தவாரி உற்சவம் நடந்த போது எடுத்த படம்.
7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேவகோட்டை மணிமுத்து ஆற்றில் 7 சுவாமிகளின் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
- திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
தேவகோட்டை
தேவகோட்டை நகரில் ஐப்பசி மாத முதல் தீர்த்த வாரியை முன்னிட்டு நகரில் உள்ள சிவன், ரங்கநாத பெருமாள், கோதண்ட ராமர், சிலம்பணி விநாயகர், சிதம்பர விநாயகர், கிருஷ்ணர் போன்ற சுவாமிகள் அலங்கரிக்கப் பட்டு நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து காந்தி பூங்காவை அடைந்தனர்.
அதேபோல் தென்னிலை நாடு காரை சேர்க்கை கோட்டூர் நைனார் வயல் அகத்தீஸ்வரர், சவுந்தர நாயகி அலங்கரிக்கப்பட்டு வாகனத்தில் கோட்டூர், மார்க்கண்டன்பட்டி வழி யாக சுமார் 300-க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் காந்தி பூங்காவை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து சுவாமிகளும் மணிமுத்தா ற்றில் எழுந்தருளினர்.
அங்கு 7 சுவாமிகளுக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காரை சேர்க்கை யாளர்களும், நாட்டார்களும், நகரத்தார்களும் பொது மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடு களை காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் தலைமையில் காவல் துறையினர் பணியில் ஈடுபட்டனர்.