என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு
By
மாலை மலர்3 Dec 2022 2:06 PM IST

- திருப்பத்தூரில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள சாரைப்பாம்பு பிடிபட்டது.
- வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அகிழ்மனைத்தெரு முத்தையா பிள்ளை காம்பவுண்ட் பகுதியில் வசித்து வருகிறார் காத்த பெருமாள் மனைவி சொர்ணத்தம்மாள். இவரின் வீட்டின் பின் பகுதியில் பாம்பு புகுந்தது.
உடனடியாக திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியம் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் பாம்பு பிடிக்கும் உபகரண கருவிகள் கொண்டு சுமார் 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
பின்னர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
×
X