search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை
    X

    ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை

    • ஆரம்ப சுகாதார நிலையம், உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் ஆகியவை குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இளையான்குடி வட்டாரம், சாலைக்கிராமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட சூராணம் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 22 ஆயிரம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் 8 துணை சுகாதார நிலையங்கள் மூலம் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் தொற்றா நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சூராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகிலுள்ள கிராமங்களில் இருந்தும், தினசரி சுமார் 120 பேர் வெளிநோயாளிகள் சிகிச்சைக்காகவும், மாதந்தோறும் சராசரியாக 5 பிரசவங்களும் நடைபெறு கிறது. இதன்மூலம் அருகில் உள்ள கிராமங்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் பயன்பெற்று வருகிறார்கள்.

    இந்த மருத்துவமனையின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 1989-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதிப்பீட்டு அறிக்கை பொதுப்பணித்துறையின் சார்பில் பெறப்பட்டு, அரசிற்கு கருத்துரு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்ட கங்களை கலெக்டர் வழங்கி னார். துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் ஆரோன் அரவிந்த்ரேசிஸ், மருத்துவ அலுவலர் செந்தில்குமாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×