என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம் பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/14/1746154-kangi.jpg)
பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேவகோட்டையில் அம்மன் கோவிலுக்கு பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலம் சென்றர்.
- சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்
தேவகோட்டை
தேவகோட்டை நகர் போலீஸ் நிலையம் எதிர் புறம் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி திருவிழா நடைபெறும். அதேபோல் 33-ம் ஆண்டு முப்பெரும் விழா நடைபெற்றது.
நேற்று மாலை கருதா வூரணியில் இருந்து 108 பெண்கள் அக்னி சட்டி எடுத்து கோவில் சென்றனர். இன்று காலை 5004 பேர் கருதாவூரணியில் இருந்து கஞ்சி கலயம் எடுத்து சிவன் கோவில் சாலை, பேருந்து நிலையம், திருப்பத்தூர் ரோடு வழியாக கோவில் சென்றடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து 1008 பெண்கள் பால்குடம் எடுத்து யூனியன் ஆபீஸ் விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் பொன்னழகு பெரியநாயகி, கனகசபை, கவுன்சிலர் நிரோஷ சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கி னார்கள். விழாவில் தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்