என் மலர்
உள்ளூர் செய்திகள்
பட்டாசுக்கடை, பெட்ரோல் விற்பனை: இணையவழி மூலமாக விண்ணப்பம்
- பட்டாசுக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
- தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான தடையின்மைச்சான்று பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்ததின் பேரில் தடையின்மை சான்று வழங்கப்பட்டு வந்தது.
தற்போது சென்னை முதன்மைச் செயலர் , வருவாய் நிர்வாக ஆணையரின் 7.6.2022-ம் நாளிட்ட கடிதத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற, தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, எதிர்வரும் காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.