என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிலம்பாயி மருத்துவமனையை சீமான் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். அருகில் மருத்துவர் சாரா ராமு, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் சாயல்ராம் உள்பட நிர்வாகிகள் உள்ளனர்.
சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா
- காரைக்குடியில் சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.
- நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருணா நகரில் புதிதாக கட்டப்பட்ட சிலம்பாயி ஹோமியோபதி மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.சாயல்ராம் வரவேற்றார்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி மருத்துவமனையை திறந்து வைத்து பேசினார்.
மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் வெற்றிக்குமரன், கோட்டைக்குமார், ஹீமா யூன் கபீர், சாட்டை துரை முருகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, தென்சென்னை மாவட்ட செயலாளர் புகழேந்தி, மாநில கொள்கை பரப்புச் செயலாளர்கள் செயசீலன், ராவணன் சுரேஷ், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் திருச்சி பிரபு, மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மாநில மருத்துவ பாசறை ஒருங்கி ணைப்பாளர் மருத்துவர் பிரபாகரன், சிவகங்கை வடக்கு மாவட்ட தலைவர் ராமசெயம் உள்பட மாநில, மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், இளஞ்சியமங்களம் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் சாரா ராமு நன்றி கூறினார்.