search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை
    X

    தூய்மை பணியாளர்களுக்கு நகர்மன்ற தலைவர் முத்துத்துரை புத்தாடைகள் வழங்கியபோது எடுத்த படம். அருகில் முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்பட பலர் உள்ளனர்.

    மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

    • மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
    • காரைக்குடி நகர்மன்ற தலைவர் வழங்கினார்.

    காரைக்குடி

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி-சேலை உள்ளிட்ட புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    அதனை முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் சே.முத்துத்துரை வழங்கினார்.

    இதில் நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் சீமா, நகர் நல அலுவலர் மாலதி, சுகாதார ஆய்வாளர் சுந்தர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், துரை.நாகராஜன், அனனை மைக்கேல், தெய்வானை இளமாறன், சாந்தி நாச்சியப்பன், மங்கையற்கரசி அடைக்கலம், கலா காசி நாதன், நாச்சம்மை சிவாஜி, மெய்யர், ராதா பாண்டியராஜன், முகமது சித்திக், பசும்பொன் மனோகரன், பிலோமினாள், ராணி சேட், ஹரிதாஸ், அஞ்சலிதேவி, ஹேமாதா செந்தில், அமுதா சண்முகம், கனகவல்லி, மலர்விழி பழனியப்பன், பூமிநாதன், திவ்யா சக்தி, அமுதா, மஞ்சுளா, சத்தியா கார்த்திகேயன், லில்லி தெரசு, தனம் சிங்கமுத்து, ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஆலங்குடி யார் நகர்மன்ற நடுநிலை பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை நகர்மன்ற தலைவர் முத்துதுரை தொடங்கி வைத்தார். நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×