என் மலர்
உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. ஆறுதல்
- காரைக்குடியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தமிழரசி எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
- அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் காரைக்குடி அருகே விபத்தில் சிக்கினர். இதில் பூச்சியனேந்தல் கிராமத்தைசேர்ந்த 4 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்து காரைக்குடி, மதுரை, சிவகங்கை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதை அறிந்த மானாமதுரை எம்.எல்.ஏ. தமிழரசி மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
மேலும் அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மருத்துவ அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழரசி எம்.எல்.ஏ. காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், சந்தித்து ஆறுதல்கூறினார். மேலும் பூச்சி யனேந்தல் கிராமம், இந்திராநகர் பகுதிகளுக்குசென்று விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.
அப்போது இளையான்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர்- முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், கண்ண மங்கலம் கூட்டுறவு வங்கி தலைவர் தமிழரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.