என் மலர்
உள்ளூர் செய்திகள்
கோவில் கும்பாபிஷேகம்
- திருப்பத்தூர் அருகே பாலவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பாலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சமத்துவபுரம் எதிரில் காமாட்சி சன்மீனா வளாகத்தில் பிள்ளையார்பட்டி சாலையில் அமைந்துள்ள பால விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி யாகசாலை பூஜைகள் வைரவன்பட்டி குருக்கள் தலைமையில் நடந்தது. கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. கோ.பூஜை, விக்னேசுவர பூஜை நடந்தது. புனித தீா்த்தம் வைக்கப்பட்ட கும்ப கலசங்களுக்கு 3 கால பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்பு மகாபூா்ணாகுதி, தீபாராதனை நிறைவு பெற்று புனித நீா்க்குடங்கள் யாகசாலையிலிருந்து கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடா்ந்து மூலவா் பாலவிநாயகருக்கு பால், பன்னீா், இளநீா், திரவியம் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேகங்கள் தீபாராதனை நடந்தன. சிறப்பு பூஜைகளும் நடந்தன. பாலவிநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
விழா ஏற்பாடுகளை காமாட்சி சன்மீனா நாக ராஜன் குடும்பத்தினர் செய்திருந்தனா். கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.