என் மலர்
உள்ளூர் செய்திகள்
129 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
- இளையான்குடியில் 129 பயனாளிகளுக்கு ரூ.75.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டத்தில் உள்ள உதயனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழக முதல் அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மேலும் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடி யாக வழங்கிடும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந் தேடுத்து அதில் உள்ள கிரா மங்களுக்கு சென்று பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் நடத்தப் பட்டு வருகிறது.
இந்த முகாமினை முன்னிட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக 233 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அதில் தகுதி யுடைய 130 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பொது மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்திடும் பொருட்டு கூட்டு குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட் டங்களின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம் பாட் டிற்கு மகளிர் திட்டம் கூட்டு றவு சங்கங்களின் மூலம் கிஷான் அட்டை, கால்நடை பராமரிப்பு, கடன் பயிர் கடன் மற்றும் கருவேலை மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்து பயன் பெறுவதற்கென ஒரு ஹெட் டருக்கு ரூ. 7,500 தொகை என அரசின் பல்வேறு திட் டங்களின் கீழ் பொதுமக்க ளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அரசால் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களை அணு பயன்பெற வேண்டும்.
மேலும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த தகுதியான நபர்களை தவிர நிரா கரிக்கப்பட்ட மனுக்களுக்கு அதற்கான காரணங்களை இணையதளத்தின் வாயி லாக தெரிந்து கொள்ளலாம். அதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் அதனை மேல் முறையீடு செய்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அழியா செல்வமான கல்வியினை வழங்கிட வேண்டும். குறிப் பாக அவர்கள் உயர் கல்வி கற்பதற்கும் உறுதுணையாக இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோக னச்சந்திரன், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், சிவகங்கை வரு வாய் கோட்டாட்சியர்சுகிதா, இளையான்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முனியாண்டி, உதயனூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரிட்டோ, இளையான்குடி வட்டாட்சியர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.