என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்25 Sept 2023 12:20 PM IST
- நலப்பணித்திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணி திட்டநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்திரா நகர் கிராமத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமையேற்றார். நிகழ்வில் கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, விதை பந்து வழங்கப்பட்டது.
மேலும் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முஹம்மது, அப்ரோஸ் மற்றும் சேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
X