என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் பேசிய போது எடுத்த படம். அருகில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. உள்ளார்.
இந்திய பிரதமர் யார் என்பதை அ.தி.மு.க. தான் தீர்மானிக்கும்:முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேச்சு
- இந்திய பிரதமர் யார் என்பதை அ.தி.மு.க. தான் தீர்மானிக்கும்.
- கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை சட்டமன்ற தொகுதி சார்பில் காளை யார்கோவிலில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பேசிய தாவது:-
நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அதை நிறைவேற்ற வில்லை. ஆனால் எடப்பாடியாரின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத இடஒதுக்கீடு மூலம் வருடத்திற்கு அரசு பள்ளி மாணவர்கள் 600 பேர் மருத்துவர்களாகி வருகின்றனர்.
உண்மையான சமூக நீதி அரசாக அ.தி.மு.க. அரசு இருந்தது. வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளைக் கைப்பற்றி இந்திய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும். 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பா டியாரின் தலைமையில் ஆட்சி அமைய ஒற்றுமை யுடன் பணியாற்ற வேண்டும்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில். தமிழக அரசியல் களத்தை மிகப்பெரிய செல்வந்தர்கள் ஜமீன்தார்களிடமிருந்து மீட்டு சாமானியர்களிடம் கொண்டு சென்றவர் அண்ணா என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய யெலாளர் பழனிசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அருள் ஸ்டீபன், செந்தில் குமார், கருணாகரன், கோபி, சிவசிவஸ்ரீதர், சோனைரவி, செல்வமணி, மகளிரணி செயலாளர் ஜாக்குலின், கலைபிரிவு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மறவமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மகூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ், மகளிரணி நிர்வாகி வெண்ணிலா சசிகுமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், துணை செயலாளர் சதீஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர்கள் சங்கர்ராமநாதன், குழந்தை உள்பட கலந்து கொண்டனர்.