என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் புகுந்த சாரை பாம்பு
Byமாலை மலர்24 April 2023 3:27 PM IST
- 3 அடி நீளமுள்ள சாரைபாம்பு வீட்டிற்க்குள் புகுந்தது.
- துப்புரவு பணியாளர் வெங்கடேசன் என்பவர் தைரியமாக வீட்டினுள் சென்று கையால் லாவகமாக சாரைபாம்பை பிடித்து எடுத்து வெளியே வந்தார்.
மாரண்டஅள்ளி,
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே சின்னசாமி கொட்டாய் பகுதியில் குடியிருந்து வருபவர் வள்ளி. இவர் வீட்டில் அனைவரும் டி.வி பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது 3 அடி நீளமுள்ள சாரைபாம்பு வீட்டிற்க்குள் புகுந்தது. இதனை கண்ட குடும்பத்தினர், பாம்பு, பாம்பு என அலறினார்.
அப்போது அங்கு பணியில் இருந்த மாரண்ட அள்ளி பேரூராட்சி துப்புரவு பணியாளர் வெங்கடேசன் என்பவர் தைரியமாக வீட்டினுள் சென்று கையால் லாவகமாக சாரைபாம்பை பிடித்து எடுத்து வெளியே வந்தார்.
இதன் பிறகே வள்ளி குடும்பம் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
X