என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் சமூகப் பொறுப்பு தினம் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் சமூகப் பொறுப்பு தினம்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/04/1926839-1treasureschool.webp)
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் சமூகப் பொறுப்பு தினம்
![TNLGanesh TNLGanesh](https://media.maalaimalar.com/profiles/75922/1728216-ganeshprofile.jpg)
- மாணவ, மாணவிகள் சமூகத்தில் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் விழா கொண்டாடப்பட்டது.
- மாணவ- மாணவிகள் சமூகத்தில் மருத்துவர், நீதிபதிகள் போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தென்காசி:
செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் சமூகப் பொறுப்பு தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தாளாளர் டாக்டர் சேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ, மாணவிகள் தன் குடும்பத்திலும், சமூகத்திலும் எவ்வாறு பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் ஆசிரியைகள் நந்தினி, பிரீத்தி மற்றும் சுபாஷினி சமூகப் பொறுப்புணர்வை உணர்த்தக்கூடிய பதாகைகளை பள்ளியின் வளாகத்தில் வைத்தனர். மேலும் பள்ளி தாளாளர், முதல்வர் மாணவ, மாணவிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் மழலையர் பிரிவு மாணவ- மாணவிகள் சமூகத்தில் முக்கிய பங்காற்றக் கூடிய பணியில் இருக்கும் போலீசார், மருத்துவர் மற்றும் நீதிபதிகள் போன்று உடை அணிந்து கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் அருள் வர்ஷனா செய்திருந்தார்.