என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்-தமிழக மக்களின் உயர்வுக்காக அரும்பாடுபட்டவர் சி.பா.ஆதித்தனார்: வி.ஜி.சந்தோசம் புகழாரம்
- தமிழுக்காக சி.பா.ஆதித்தனார் செய்த அரும்பணிகள் ஏராளம்.
- “பாரிஸ்டர்” பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர் சி.பா.ஆதித்தனார்.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாளையொட்டி வி.ஜி.பி. குழும தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் வெளியிட்டுள்ள நினைவேந்தலில் கூறி இருப்பதாவது:-
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் 42-வது நினைவு நாளை தமிழகம் மட்டுமல்ல உலகில் உள்ள தமிழர்கள் எல்லோரும் இன்று நினைவு கூருகின்றனர். அவர் தமிழுக்காக செய்த அரும்பணிகள் ஏராளம். தமிழகச் சட்டசபையில் சபாநாயகராக இருந்து திருக்குறளை அனைவரும் அறியும்படி செய்தவர்.
தமிழ்! தமிழ்! என்ற தாகத்தோடு பட்டித்தொட்டி எல்லாம் இருக்கின்ற பாமர மக்களும் தினத்தந்தி நாளிதழ் மூலமாக தமிழை படிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தவர். அவர் "பாரிஸ்டர்" பட்டம் பெற்றாலும், தமிழுக்காகவும், தமிழக மக்களின் உயர்வுக்காகவும் அரும்பாடுபட்டவர். இன்று அவரின் 42-வது நினைவுநாளை நினைவு கூருகின்றோம். அவர் தம் புகழ் ஓங்குக! வாழ்க தமிழ்! வெல்க குறள் நெறி!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.