search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X

    புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையொட்டி இன்று தருமபுரி அடுத்து மூக்கனூர் ஆதிமூலம் கேசவ பெருமாள் கோவில், பழைய தருமபுரி வரதக்குப்பம் வெங்கடா ரமண சாமி கோவில், அதகப்பாடி லட்சுமி நாராயணா பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    • தருமபுரி மாவட்ட பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டின் முக்கிய மாதம் ஆகும்.இந்த மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் சிறப்பு பலன்கள் கிடைப்பதாக நம்பப்படுகிறது.புரட்டாசி முதல் சனிக் கிழமையை யொட்டி காலை முதலே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்க ளில் வழிபாடு செய்ய வரத்தொடங்கினர்.

    அதன்படி தருமபுரி கோட்டையில் உள்ள வரமகாலட்சுமி பரவாசு தேவர் கோவில், செட்டிக் கரை ஸ்ரீ வெங்கட்ரமணா கோவில், பழைய தர்மபுரி வெங்கட்ரமணா கோவில், மூக்கனுர் ஆதிகேசவப் பெருமாள் கோவில், மணியம்பாடி ஸ்ரீவெங்கட் ரமணா கோவில், அதகப்பாடி பெருமாள் கோவில், எஸ், வி, சாலையில் உள்ள பெருமாள் கோவில், பென்னாகரம், நல்லம்பள்ளி, பாலக்கோடு, கடத்தூர், மொரப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் பொதுமக்கள் பூஜைப் பொருட்கள் மற்றும் துளசி மாலை உடன் வந்து பூஜை செய்தனர். பெருமாள் கோவில்களில், சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.

    சிறப்பு அலங்கா ரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு துளசி தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×