search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைப்பு
    X

    விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைப்பு

    • கடந்த வாரம் பேருந்து நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்த தனியார் பேருந்து இடித்து ஒருவர் பலியானார்.
    • பேருந்துநிலையத்தில் புதிதாக வேகத்தடை அமைபக்கப்படடது.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் கிருஷ்ணகிரி , தருமபுரி , சேலம் , பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வந்து செல்கின்றன .

    பேருந்துகள், பஸ் நிலையத்திற்கு வரும்பொழுது மிக வேகமாக உள்ளே நுழைகின்றன. அப்படி நுழையும் போது பேருந்து நிலையத்திற்கு உள்ளே நுழையும் பொதுமக்கள் வேகமாக பேருந்துகளுக்கு வழி விடும் நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் பேருந்து நிலையத்துக்குள் அதிவேகமாக நுழைந்த தனியார் பேருந்து இடித்து ஒருவர் பலியானார்.

    இதனை அடுத்து காவேரிபட்டினம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்லும் வழியும் வெளியே செல்லும் வழியினை வேகத்தடை அமைக்கும் பணியினை இன்று தொடங்கினர்.

    Next Story
    ×