search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் மாணவியை கிண்டல் செய்த மாணவன் மீது தாக்குதல்
    X

    அரசு பள்ளியில் மாணவியை கிண்டல் செய்த மாணவன் மீது தாக்குதல்

    • மாணவனிடம், மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • ஆத்திரமடைந்த மாணவியின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மாணவனை சரமாரியாக தாக்கினார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்த ஊட்டமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன், தன்னுடன் படிக்கும் மாணவியை கிண்டலும், கேலியும் செய்துள்ளார்.

    இதுகுறித்து மாணவி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து தலைமைஆசிரியர் பாலாஜியிடம் புகார் தெரிவித்தனர்.

    அப்போது தலைமை ஆசிரியர் பாலாஜி, துணை தலைமைஆசிரியர் நஞ்சப்பன், ஆசிரியர் வேல் முருகன் ஆகியோர் மாணவனிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது மாணவனிடம், மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் மாணவனை சரமாரியாக தாக்கினார்.

    இதில் காயமடைந்த மாணவனை பள்ளி நிர்வாகிகள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவன் சிகிச்சை பெற்று வருகின்றான். இந்த சம்பவம் குறித்து தலைமையாசிரியர் பாலாஜி ஒகேனக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தாக்கிய தங்கவேலை கைது செய்தனர்.

    மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×