என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/11/10/1789613-dead22.jpg)
சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சின்னசேலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி மாணவர் பலியானார்.
- கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எடுத்துவாய் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.அவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகன் திவாகர் (வயது 19). இவர் சின்னசேலம் அருகே இந்திலி கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கல்லூரிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று கல்லூரி முடித்துவிட்டு மாலையில் கல்லூரியில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது அதே கல்லூரியை சேர்ந்த பஸ் ஒன்று கல்லூரி வளாகத்திற்கு உள்ளே நுழைந்த போது மாணவர் திவாகர் எதிர்பாராத விதமாக பஸ் மோதியதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனார் இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் திவாகரன் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் உள்ளனர்.