என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரியலூரில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ரிஷிவந்தியம் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுக்கா அரியலூர் அரசு பள்ளியில் இயங்கி வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஒன்று திரண்டு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி னார். இது பற்றி தகவலறி ந்த கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.செ யலாளரும், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ.வுமானவசந்தம் கார்த்திகேயன் விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் .
நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு நல்ல முறையில் கல்வி கற்க வேண்டும் என்றார். அதனை ஏற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், கட்சி நிர்வாகிகள் அண்ணா துரை, லிங்கநாதன், பத்மநா பன் உள்பட பலர் உடன் இருந்தனர்.