search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.1கோடிக்கு சூரியகாந்தி விதை-பருத்தி ஏலம்
    X

    கோப்புபடம்

    ரூ.1கோடிக்கு சூரியகாந்தி விதை-பருத்தி ஏலம்

    • விவசாயிகள் 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

    இந்த வார ஏலத்துக்கு திண்டுக்கல், இடையகோட்டை, வெள்ளாளபட்டி, போத்துராவுத்தன்பட்டி, மஞ்சக்காம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 விவசாயிகள் தங்களுடைய 235 மூட்டைகள் சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 11,603 கிலோ.

    முத்தூா், காரமடை, சித்தோடு, பூனாட்சி, காங்கயத்தில் இருந்து 7 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ.64.44 முதல் ரூ. 69.99 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 66.59. கடந்த வார சராசரி விலை ரூ.70.02. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 8 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் பல கலந்து கொண்டனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.9,999 -க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150 -க்கும், சராசரி விலையாக ரூ .8,950 -க்கும் விற்பனையானது.பருத்தியின் மொத்த அளவு 3,039 மூட்டைகள், குவிண்டால் 1023.04. இதன் மதிப்பு ரூ.90 லட்சத்து 97 ஆயிரத்து 133. இந்த மறைமுக ஏலத்தில் 14 வியாபாரிகள் பங்கேற்றனர். இந்த தகவலை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    Next Story
    ×