என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் செயற்கை நூலிழை ஆடை தயாரிப்பு கருத்தரங்கு நாளை நடக்கிறது

- பருத்தி ஆடைகளை திருப்பூரில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- ஆண்டுதோறும் 200 சதவீதம் வளர்ச்சியை செயற்கை நூலிழை ஆடைகள் பெற்றுள்ளன.
திருப்பூர் :
ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் பருத்தி ஆடைகளை திருப்பூரில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்து வருவதால் செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஏற்றுமதியாளர்கள் கவனத்தை திருப்ப வேண்டிய நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் 200 சதவீதம் வளர்ச்சியை செயற்கை நூலிழை ஆடைகள் பெற்றுள்ளன.
திருப்பூரில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை நூலிழை துணி மறறும் ஆடை உற்பத்தியில் கடும் சவால்களை எதிர்கொண்டு அதன் நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் கற்று தற்போது ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம், ஆர்டர்களை மேற்கொண்டு வரும் டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிறுவனரான சுனில் ஜூன் ஜூனவாலா ஆடை தயாரிப்பு, உற்பத்தி, சந்தை வாய்ப்புகள், முதலீடுகள் குறித்து தெரிவிக்க உள்ளார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர்கள் துணைக்குழு சார்பாக ஒவ்வொரு மாதமும் வர்த்தகத்துக்கு உதவும் கருத்தரங்கு நடத்தப்படும். நாளை 6-ந்தேதி திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பிஸ் விஸ்டா ஓட்டலில் நடக்கும் கருத்தரங்கில் சுனில் ஜூன்ஜூனவாலா பங்கேற்று பேசுகிறார். இதை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.