என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருஷாபிஷேகம்
ByMaalaimalar19 Jan 2025 10:04 AM IST
- மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினம்.
- காலை 8.15 மணிக்கு மூர்த்திகளுக்கும், விமான கலசத்திற்கும் கலசாபிஷேகம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான இன்று தை உத்திர வருஷா பிஷேகம் நடந்தது.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 5மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம், காலை 8.15 மணிக்கு மூர்த்திகளுக்கும், விமான கலசத்திற்கும் கலசாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. இரவு அபிஷேகம் நடைபெறாது. மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
இரவு புஷ்பாஞ்சலி நடக்கிறது. இன்று காலையில் நடைபெற்ற வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X