search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்
    X

    செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்

    • கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனையில் ஈடுபட்டனர்.
    • அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

    கரூர்:

    சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 3-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணியளவில் தொடங்கப்பட்ட விசாரணையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது.

    இதனிடையே கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் 2 காரில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனைக்கு பிறகு அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

    ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராக 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

    Next Story
    ×