search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
    X

    ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.வில் இணைக்க வாய்ப்பே இல்லை- எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

    • அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது.
    • தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பூத்துக்கு 25 பேர் வீதம் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 7500 பேர் நியமிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரின் செயல்பாடு அ.தி.மு.க. ஆட்சி அமைக்க ஏதுவாக இருக்கும்.

    325 பூத்-ல் ஒரு ஓட்டு குறையும் என்றால் 325 ஓட்டு குறையும். ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியம். புதிதாக நமக்கு சாதகமானவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். உண்மையாக பாடுபட வேண்டும். அது தான் நிரந்தரம் ஐஎஸ்ஐ என்று ஒரு முத்திரை நல்ல பொருள் என்று அர்த்தம் . அது போல் அ.தி.மு.க. என்றால் ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி இருக்க வேண்டும்.

    2500 பேர் பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஓ.பி.எஸ்-ஐ நீக்கினோம். உச்சநீதிமன்ற நீதிபதி பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளில் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.

    சட்ட விதிகளின்படி 2500 உறுப்பினர்கள் சேர்ந்து முடிவு எடுத்தது. இதில் அவர்கள் இணைவதற்கு எந்த ஒரு வாய்ப்பும் கிடையவே கிடையாது. எம்.ஜி.ஆரால் ஏற்படுத்தப்பட்ட சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடைபெற்றது. அதில் போடப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும். செல்லாத நோட்டை பற்றி ஏன் நான் பேச வேண்டும்.

    அ.தி.மு.க. பற்றி பேசினால் தான் மக்கள் கவனம் ஈர்க்கப்படுகிறது. தி.மு.க.வை பற்றி பேசினால் யாரும் கண்டு கொள்வதில்லை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது

    திமுக ஆட்சி எப்போது போகும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளனர். அரசு ஊழியர்கள் எப்பொழுதும் திமுகவுக்கு சாதகமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் இப்பொழுது திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    சேலம் மாவட்டத்தில் நாம் கொண்டு வந்த திட்டத்தை தவிர வேறு திட்டம் ஏதாவது திமுக ஆட்சியில் கொண்டு வந்திருக்கிறார்களா?

    7.5% இடஒதுக்கீடு, மருத்துவமனை, தார் சாலைகள், மேம்பாலம், ஏழை பொதுமக்களுக்கு செய்யப்பட்ட உதவிகள் சேலம் மாவட்டத்தில் காலத்தால் அழியாதவை. அதனால் தான் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை நாம் கைப்பற்றினோம். திமுக தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கலாம். ஆனால் சேலம் மாவட்டத்தில் ஆளுகின்ற கட்சி அதிமுக தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×