search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி ரெயில் நிலையத்தில் சென்னை மூதாட்டியிடம் நகை பறித்த கும்பலுக்கு வலை
    X

    பழனி ரெயில் நிலையத்தில் சென்னை மூதாட்டியிடம் நகை பறித்த கும்பலுக்கு வலை

    • மூதாட்டி அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் சுற்றித் தருவது போல கொடுத்து விட்டுச் சென்றனர்.
    • ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    பழனி:

    சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் மனைவி குண்டு மாயி (வயது 80). இவர் பழனி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை செல்வதற்காக பழனி ரெயில் நிலையத்தில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் ரெயில் நிலையத்தில் கொள்ளையர்கள் அதிகமாக நடமாடி வருகின்றனர். எனவே நீங்கள் அணிந்துள்ள நகைகளை பையில் வைத்துக் கொள்ளுங்கள் என கூறினர். அதன்படி அவர் அணிந்திருந்த தோடு மற்றும் சங்கிலியை வாங்கிக் கொண்டு ஒரு பேப்பரில் சுற்றித் தருவது போல கொடுத்து விட்டுச் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து அந்த பேப்பரை குண்டு மாயி திறந்து பார்த்தார். அப்போது அதில் இரும்பு போல்ட், நட்டுகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×