என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/14/1898259-esi.webp)
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய இஎஸ்ஐ மருத்துவர்களும் பரிந்துரை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மருத்துவ குழு அறிக்கை இஎஸ்ஐ முதல்வருக்கு அளிக்கப்படும்.
- இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத்துறையினரிடம் அளிப்பார்.
சென்னை:
ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது என்றும் அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அறிக்கையை அமலாகத்துறையினர் ஆன்லைன் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அனுப்பி வைத்து இருந்தனர்.
இந்நிலையில், மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
இதையடுத்து செந்தில் பாலாஜியை பரிசோதித்த இஎஸ்ஐ மருத்துவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
மருத்துவ குழு அறிக்கை இஎஸ்ஐ முதல்வருக்கு அளிக்கப்படும். இஎஸ்ஐ மருத்துவமனையின் முதல்வர் அறிக்கையினை அமலாக்கத்துறையினரிடம் அளிப்பார். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது.