என் மலர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
- சம்பவத்தன்று மாணவியின் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்த வாலிபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
- அப்போது அங்கு வந்த மாணவி தாயார் அதை கண்டிக்கவே அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த மாணவியை அவரது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இது போன்ற செயல்களில் கருப்பசாமி ஈடுபட்டதால் மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வாலிபரை அழைத்து கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாணவியின் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்த வாலிபர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மாணவி தாயார் அதை கண்டிக்கவே அவரை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார்.
சம்பவம் பற்றி மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் கருப்பசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.