என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வீட்டில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் கழுத்தில் காயங்கள்- போலீசார் விசாரணை வீட்டில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் கழுத்தில் காயங்கள்- போலீசார் விசாரணை](https://media.maalaimalar.com/h-upload/2023/06/24/1903704-death3.webp)
வீட்டில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் கழுத்தில் காயங்கள்- போலீசார் விசாரணை
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் ரூபன். இவரது மனைவி பிலோமினாள்(வயது 38). இந்த தம்பதி ஆழ்வார் குறிச்சியில் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு சொந்தமாக கோழிப்பண்ணையும் உள்ளது.
இவர்களுக்கு பீலா என்ற மகளும், பெல்வின் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ஆழ்வான் துலுக்கப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவு பிலோமினாளும், ரூபனும் வழக்கம்போல் தூங்க சென்றனர்.
நேற்று காலையில் பிலோமினாள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கடையம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் கார்த்தி நேசன் கடையம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது அக்காவின் சாவில் மர்மம் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரூபன் கோழிப்பண்ணை ஆரம்பிக்க கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இறந்த பிலோ மினாளின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.