என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு
BySuresh K Jangir17 Feb 2023 10:33 AM IST
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- நீர்வரத்து குறைந்ததால், நேற்று 103.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 103.83 அடியாக சரிந்துள்ளது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதேசமயம் மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1,142 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,004 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து குறைந்ததால், நேற்று 103.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று 103.83 அடியாக சரிந்துள்ளது.
Next Story
×
X